![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1964ddd3-bb9c-41d9-b6b1-248e628bc2c1/WhatsApp+Image+2021-03-10+at+3.52.54+PM.jpeg)
தென்றல் நாதீஸ்வரர் ஆலயம்
அயன்வேலூர் | கள்ளக்குறிச்சி | தமிழ்நாடு
கூரை மற்றும் மேடை அமைத்தல்
கால அளவு: 4 நாட்கள்
செலவு: ₹ 41, 700
ஜனவரி ‘21: கள்ளக்குறிச்சி மாவட்டம், அயன்வேலூரில் வெட்டவெளியில் நின்றிருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபட்டு வந்த மக்கள் கொடுத்த தகவலின் பயனாக அங்கு சென்ற அரன்பணி குழு அவ்வூர் மக்களுடன் இணைந்து ஆஸ்பெஸ்டாஸ் தகட்டால் ஆன கூரை வேயும் பணியில் ஈடுபட்டது. பணிகள் நிறைவடைந்த ஒருசில நாட்களிலே மழை பெய்ய அவ்விடம் மக்கள் அண்ட முடியாதவாறு சேறும் சகதியுமாய் மாறியது. அதனால் பெருமானார்க்கு நடக்கும் வழிபாட்டினை நடத்த இயலாத நிலை வந்தது. அதுபொழுது அரன்பணி அறக்கட்டளை வழியாக இறைவர் திருமேனியும் நந்தியின் திருவுருவச் சிலையும் சிறிய மேடைகள் அமைத்து அதன் மேல் நிறுவப்பட்டன. மேலும் மக்கள் வழிப்பாடு செய்ய ஏதுவாக மேடைத்தளம் அமைக்கப்பட்டது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/3b5783d6-f183-43a2-9966-3d472a6a2678/WhatsApp+Image+2021-03-10+at+3.52.54+PM.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > அயன்வேலூர்