காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயம்

 

பொன்மான் மேய்ந்த நல்லூர் | பாபநாசம் | தஞ்சை | தமிழ்நாடு

புதிய ஆலயம் அமைத்தல்

கால அளவு: 1.5 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 12, 00, 000 (மதிப்பீடு)

ஏப்ரல் ‘22: திருவருளும் குருவருளும் முன்னின்று அருள் செய்ய 25-04-2022 அன்று குடமுழுக்கு ஊர்மக்கள் பலரும் கலந்துகொள்ள நடைபெற்றது

ஏப்ரல் ‘22: 25-04-2022 அன்று குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது

நவம்பர் ‘21: பஞ்சவர்ணம் தீட்டும் பணி நடைபெறுகின்றது

அக்டோபர் ‘21: கட்டுமான பணிகள் நிறைவு பெற்று வர்ணம் தீட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது

செப்டம்பர் ‘21: இறைவன், இறைவி, சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னதி கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவுற்றது.

ஆகஸ்ட் ‘21: வர்ணம் பூசும் பணிகள் தொடங்கி, வெள்ளை அடித்து ஒரு கோட்டிங் ப்ரைமர் அடிக்கப்பட்டுள்ளது

ஜூலை ‘21: கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த நிலையில் வர்ணம் பூசும் பணிகள் துவங்கப்பட்டன


ஜூன் ‘21: அம்மை மற்றும் இறைவர்க்கான கருவறை விமானம் கட்டும் பணிகள் நிறைவடைந்தது. பூச்சு வேலைகளும் முழுமைபெற்று விமானத்தில் சிற்பம் நிறுவும் பணிகள் துவங்கப்பட்டது. மேலும் சன்னதிப்பகுதியில் திருவாசி போன்றதொரு வடிவம் அமைக்கும் பணி நடைபெறுகிறது


மே ‘21: அம்மை மற்றும் இறைவருக்கான கருவறை அமைக்கும் பணி நிறைவுற்று விமானம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன


ஏப்ரல் ‘21: அடித்தளம் அமைக்கும் பணி நிறைவுற்று இறைவர் மற்றும் அம்மைக்கான சன்னதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது


மார்ச் ‘21: அடித்தளம் அமைப்பு முழுமைபெற்று சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நடந்துவருகின்றன


பிப்ரவரி ‘21: ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் சீர் படுத்தப்பட்டு அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன


ஜனவரி ‘21: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள பொன்மான் மேய்ந்த நல்லூர் என்னும் எழில் கொஞ்சும் ஊரில் உள்ள காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தில் சிறியதொரு தகடு கூரை அமைக்கப்பட்டிருந்தது. ஊர் பொதுமக்களின் அளவில்லா விருப்பம் காரணமாக நந்தம் பெருமானின் திருவருளும் குருவருளும் முன்னின்று அருள் செய்ய அரன்பணி அறக்கட்டளையும் இணைந்து இந்த அழகிய ஊரில் உள்ள பெருமானார்க்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

லிங்கத் திருமேனி சுற்றுத் தெய்வங்களுடன்

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > காசி விஸ்வநாதர்