காக்காகோட்டூரார் ஆலயம்

 

நன்னிலம் | திருவாரூர் | தமிழ்நாடு

நின்ற புதிய ஆலயம் கட்டும் பணியை நிறைவு செய்தல்

கால அளவு: 1.5 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 13, 00, 000 (மதிப்பீடு)

ஜூன் ‘22: அம்மை சன்னதி கட்டுமானம் ரூப் மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளது

மே ‘22: காக்கா கோட்டூர் அம்பாள் சன்னதி பேஸ்மென்ட் போடும் திருப்பணி சண்டிகேஸ்வரர் அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெறுகிறது

ஏப்ரல் ‘22: இறைவர் சன்னதி கட்டுமான பணிகள் நிறைவு பெற்று. இறைவி சன்னதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது

செப்டம்பர் ‘21: அம்மை சன்னதியில் புடைச் சிற்பங்களை பொறிக்கும் பணி நடைபெறுகிறது


ஜூலை ’21: ஐயனின் கருவறை வேலைகள் நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், அம்மையின் சன்னதிக்கான நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.


ஜூன் ’21: பூச்சு வேலை நிறைவடைந்து விமானத்தில் சிற்பங்கள் நிறுவும் பணி நடைபெறுகிறது


மே ’21: விமானம் கட்டுமானம் நிறைவடைந்து பூச்சு வேலை துவங்கப்பட்டது


ஏப்ரல் ’21: மேல்தளம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று, கருவறை விமானம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன


மார்ச் ’21: சுற்றுச்சுவர் பணிகள் நிறைவடைந்து மேல்தளம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன


பிப்ரவரி ‘21: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் என்னும் ஊரில் உள்ள காக்காகோட்டூரார் ஆலயத் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சுணக்கம் ஏற்பட, அவ்வூர் மக்கள் அரன்பணி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டனர். குருவருளும் திருவருளும் முன் நின்று அருள் செய்ய காக்காகோட்டூர் அன்பர்களுடன் இணைந்து நாமும் இந்த ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்றுள்ளோம். நமது ஆலய நிர்மாணக்குழுவிலுள்ள சிற்பிகள் மூலமே விமானம் மற்றும் நுழைவு வாயிலில் பல்வேறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு நிறுவிட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > காக்காகோட்டூரார்