சோழீஸ்வரர் ஆலயம்

 

உடையார்பாளையம் | விக்கரமங்கலம் | அரியலூர் | தமிழ்நாடு

உழவாரப்பணி மற்றும் பராமரிப்பு

கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 55, 000

மே ‘21: அரியலூர் மாவட்டம் விக்கரமங்கலம் பகுதியில் சோழீஸ்வரர் ஆலயம் உள்ளது. முட்புதர்களால் ஆலயம் செல்லும் வழி மறைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணி அரன்பணி அறக்கட்டளை மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும், ஆலயத்தின் மரக்கதவு சேதமடைந்த நிலையில் உழவாரப் பணியின் ஒரு பகுதியாக அதனைச் சீரமைக்கும் பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அவ்வண்ணமே ஆலயத்தின் முகப்புப் பகுதியை தூய்மை படுத்தும் பணி நடந்து முடிந்தது. மேலும் ஆலயத்தின் கதவினை சீரமைக்கும் பணியும் நிறைவடைந்தது

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > சோழீஸ்வரர்