வீரசோழபுரம் கைலாசநாதர் ஆலயம்

 

வீரசோழபுரம் | அரியலூர் | தமிழ்நாடு

கோயில் புனரமைத்தல்

கால அளவு: 8 வாரம் (மதிப்பீடு)
செலவு:

அரன்பணி அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி கோவை T.V. சண்முகசுந்தரம் அவர்கள் திருப்பணியை செய்கிறார்

ஜூன் ‘22: பெருமான் கருணையினால் காசித்திருமடம் அதிபர் கயிலை மாமுனிவர் சீர் வளர் சீர் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்கள் முன்னிலையில் வரும் வைகாசி மாதம் 20ம் தேதி 03.06.2022 அன்று திருக்குடமுழுக்கு நடைப்பெற்றது

மே ‘22: திருக்கோயில் குடமுழுக்கு 03-06-2022 அன்று நிர்ணயம் செய்யப்பட்டு அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது.

டிசம்பர் ‘21: திருக்கோயிலுக்கு தேவையான திருமேனிகள் செய்யப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டது


நவம்பர் ‘21: கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, பெயிண்டிங்(வர்ணம்) தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.


October ‘21: சண்டேச நாயனார் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, பெயிண்டிங்(வர்ணம்) தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது


செப்டம்பர் ‘21: எம்பிரான் சண்டீச நாயனார் சன்னதி


ஆகஸ்ட்‘21: திருக்கோயிலின் பழுதுகள் நீக்கப்பட்டு, புதிய அர்த்தமண்டபம் கட்டப்பட்டுள்ளது.; இறைவன் மற்றும் இறைவி சன்னதிகள்; திருக்கோயில் கோபுர பணி மற்றும் பூச்சு வேலை நடைபெற்று வருகின்றது;

ஜூலை ‘21: இறைவன் இறைவி சன்னதிகள் புதுபிக்கும் பணி


Jun ‘21: அரியலூர் மாவட்டம் வீரசோழபுரத்தில் உள்ள வீரசோழீஸ்வரர் கோவில் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. கோயிலின் சுவர்களில் மரங்களும் மரக்கன்றுகளும் வளர்ந்து கோயில் கட்டுமானத்தை மேலும் சேதப்படுத்தின. அரன்பணி மற்றும் ஊர் பொதுமக்கள் கோவிலின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை முடிந்தவரை பராமரித்து புதுப்பித்தலில் இணைந்தனர்


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நடைபெறுகிறது > கைலாசநாதர்