![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628770910754-W32GL8AS5WKM0M1RMIJ2/WhatsApp+Image+2021-08-12+at+3.24.04+PM+%282%29.jpeg)
அகத்தீஸ்வரர் ஆலயம்
பெரும்புகளூர் | நன்னிலம் | திருவாரூர் | தமிழ்நாடு
புதிய ஆலயம் அமைத்தல்
கால அளவு: 1 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹12, 00,000(மதிப்பீடு)
மே ‘22: கட்டுமான பணிகள் நிறைவு பெற்று பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது
நவம்பர் ‘21: திருக்கோயிலின் கட்டுமான பணிகள்
அக்டோபர் ‘21: திருக்கோயிலின் மகா மண்டபம் கான்கிரீட் பணி நடைபெறுகிறது
செப்டம்பர் ‘21: இறைவன் இறைவி மற்றும் மற்ற தெய்வங்களின் சன்னதியின் மேற்பகுதி வேலை நடை பெறுகிறது
ஆகஸ்ட் ‘21: இறைவன் இறைவி சன்னதி கட்டுமான பணிகள் நடைபெறுகிறது
ஜூலை ‘21: திருப்பணிகள் தொடங்கி நடைபெறுகிறது
மே ‘21 : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பெரும்புகளூர் என்ற இடத்தில் எம்பிராட்டி சிவகாமி அம்மை உடனுறை எம்பிரான் அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோயில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை ஊர் மக்கள் திருப்பணி செய்யவுள்ளதாகவும், அதன் மதிப்பு 54 இலட்சங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு அரன்பணி சார்பாக உதவி செய்ய கேட்டுக்கொண்டதற்கு இணங்க நம் அறக்கட்டளை சார்பாக ரூ. 7 இலட்சமும், பெயர் சொல்ல விரும்பாத திருப்பூர் அடியார் ஒருவர் ரூ. 5 இலட்சமும் தருவதாக இசைவு தெரிவித்துள்ளார்கள். ஊர் மக்கள் மீதித்தொகை ரூ. 42 இலட்சம் பங்களித்து அதனை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கி நடை பெற்று வருகின்றது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628764376373-CPM00VQID8LZBRYR2D6I/WhatsApp+Image+2021-08-12+at+3.24.04+PM+%282%29.jpeg)